இந்தியா - நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில், முதல் ஒருநாள் போட்டி நேற்று (அக்.24) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. அதன்படி 44.3 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 40.4 ஓவர்களில் 168 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் ஆவுட் ஆனது. 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.