முசிறி - Musiri

முசிறியில் விசிக நிர்வாக குழு கூட்டம்

முசிறியில் விசிக நிர்வாக குழு கூட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருச்சிராப்பள்ளி வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாக குழு கூட்டம் இன்று 18.02.2025 வடக்கு மாவட்ட அலுவலகம் முசிறியில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் வழிகாட்டுதலில் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் மா. கலைச்செல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி கரூர் மண்டல செயலாளர் மதிப்புமிகு அ.க. தமிழாதன் அவர்கள் கருத்துரை வழங்கினார். மேலும் பல்வேறு தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன. நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சு. கனியரசன், துறையூர் தொகுதி செயலாளர் துரை. சங்கர், முசிறி தொகுதி துணை செயலாளர் உலக முதல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.  விசிக மாநில கட்சியாக அங்கீகாரம் மற்றும் பானை சின்னம் பெற்ற வெற்றி விழாவினை திருச்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய நகர பேரூர் தலைநகரங்களில் நடத்துவது என்றும் நம் மாவட்ட நிர்வாக குழு தீர்மானிக்கிறது.  மார்ச் 8 உலக மகளிர் தினத்தை ஒட்டி மார்ச் 29ல் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மகளிர் விடுதலை இயக்க மாநில மாநாட்டில் பெருந்திரளாக மகளிரை அணிதிரட்டி பங்கேற்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా