முசிறியில் தவெக ஆலோசனை கூட்டம்

66பார்த்தது
திருச்சி மாவட்டம்முசிறி தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் முசிறி சட்டமன்றத் தொகுதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன் தலைமை வகித்தார். விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் மண்ணை செந்தில் துணைத் தலைவர் ஐயப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் முக்கிய நிர்வாகிகள் செயல்பட வேண்டியது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலில் முசிறி சட்டமன்றத் தொகுதியை கைப்பற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது முசிறி தொகுதி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி