

தலை மீது ஏறி இறங்கிய லாரி டயர்.. பகீர் காட்சிகள்
ஈரோடு: அந்தியூரில், இருசக்கர வாகனத்தில் சென்றவர், லாரியின் முன் சக்கரத்தில் விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. முருகையன் என்பவர் நேற்றிரவு (மார்ச்.30) இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்லும் வழியில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதையடுத்து, உடல்நசுங்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நன்றி: தந்தி