திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் இந்தி திணிப்பை தேசிய கல்விக் கொள்கை 2020 ஏற்க மாட்டோம் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்தி திணிப்பு மற்றும் தேசிய கல்விக் கொள்கை 20 20 ஏற்க மாட்டோம் இதில் பிரின்ஸ் கஜேந்திர பாபு பொதுச்செயலாளர் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை மற்றும் தந்தை பெரியார் திராவிடக் கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டனர் இதில் பள்ளிப்படிப்புக்கும் கல்லூரி படிப்பும் தொடர்பில்லை என்பதை புதிய கல்விக் கொள்கை தெளிவுபட கூறுகிறது தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை அனுபவத்தின் அடிப்படையில் கூட ஒருவர் பேராசிரியர் ஆகலாம் என கூறியுள்ளது கல்வித்துறை சேராதவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்படுவார்கள் துணைவேந்தரை தேர்வு செய்யும் உரிமை மாநில அரசுக்கு இருக்காது புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் பல்கலைக்கழகங்கள் பட்டப் படிப்பை நடத்த முடியாது பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் பட்டங்கள் செல்லாது என்பது உள்ளிட்ட பல்வேறு முரண்பாடுகள் இந்த கல்விக் கொள்கையில் உள்ளதாக குற்றம் சாட்டினர்.