அதி பயங்கர நிலநடுக்கத்தால் உருக்குலைந்து போயுள்ள மியான்மர் மற்றும் தாய்லாந்துக்கு இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. தற்காலிக கூடாரம், போர்வை, உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட 15 டன் நிவாரணப் பொருட்கள் ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மியான்மரில் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 800-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல் தாய்லாந்திலும் நிலநடுக்கம் பலரை பலி வாங்கியுள்ளது.