ஐபில் தொடரின் 10வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் ஐதராபாத் அணி பேட்டிங் விளையாடிய நிலையில் 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் அனிகேத் வர்மா சிறப்பாக விளையாடி 74 ரன்களில் அவுட்டானார். அவர் குல்தீப் யாதவ் பந்தை சிக்சர் நோக்கி அடித்த நிலையில் பவுண்டரி லைனில் இருந்த ஜேக் ஃப்ரேசர் அபாரமாக கேட்ச் பிடித்தார்.