VIDEO: பிஞ்சு குழந்தைகளின் உயிர்களை காத்த செவிலியர்கள்

83பார்த்தது
மியான்மரில் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் உலகையே உலுக்கியுள்ள நிலையில், தன் உயிரைப் பற்றி கவலை கொள்ளாமல் 2 செவிலியர்கள் பிஞ்சு குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் சீனாவின் யுன்னானில் உள்ள ருயிலியில் உணரப்பட்டது. அங்குள்ள ஜிங்செங் மருத்துவமனையின் மகப்பேறு மையத்தில் 2 செவிலியர்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் குழந்தைகளைப் பாதுகாத்தனர்.

தொடர்புடைய செய்தி