ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். ரம்ஜான் என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது பிரியாணி தான். மாநிலத்தின் பல இடங்களில் பிரியாணி தயாரிக்கப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஆர்டரின் பேரில் சாலையில் வைத்து 2000 கிலோ பிரியாணி தயாரானது.