திருப்பூர் மாவட்டம்
உடுமலை தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல் நகரம் ஊராட்சிக்கு சில வருடங்களுக்கு முன்
புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இந்த நிலையில் சில வாரங்களாகவே இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள் செருப்பு அணிந்து செல்ல தடை விதித்துள்ளனர். இதற்கு கொங்கல் நகரம் ஊராட்சி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் மேலும் இது குறித்து குடிமங்கலம் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.