நெல்லை: மானூர் ஆலங்குளம் சாலையில் காலாவதியான மருந்துகளை கொட்டிச் சென்றவர் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நெல்லை மாவட்டம் சுத்தமல்லி கோடகநல்லூர் கொண்ட நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் மருத்துவ கழிவுகள் காட்டப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.