ஆதிக் ரவிச்சந்திர இயக்கத்தில் உருவாகியுள்ள அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தில் God Bless U பாடலில் 'துப்பாக்கிச் சத்தம் எனக்கு தாலாட்டு பாட்டு, கத்திய உரசும் சத்தம் மெலோடி பீட்டு' என விஜய்யின் துப்பாக்கி, கத்தி திரைப்படங்களை குறிக்கும் வரிகளும், ஏற்கனவே வெளியான பாடலில், 'துப்பாக்கி பிரங்கி மொத்தமா வந்தாலும் ஒத்தாள சம்பவம்டா' என்ற வரிகள் இடம் பெற்றிருந்தது. இது விஜய் மற்றும் விஜய் ரசிகர்களை சீண்டுவதற்கான வரிகள் என்று வைரலாகி வருகிறது.