

ஓடும் ரயிலில் சிக்கிய இளைஞரை காப்பாற்றிய RPF காவலர் (வீடியோ)
மகாராஷ்டிரா: ஓடும் ரயிலில் சிக்கிய இளைஞரை RPF காவலர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பை அந்தேரி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் ஏற முயற்சிக்கும் போது தவறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே விழுந்துள்ளார். இதைக்கண்ட ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு அந்த இளைஞரின் உயிரை காப்பாற்றியுள்ளார். இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.