தர்மபுரி: 100 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு
தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் நேற்று(செப்டம்பர் 15) ஆவணி மாதத்தின் கடைசி பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. குறிப்பாக தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகா அர்ஜுனீஸ்வரர் திருக்கோயில், நெசவாளர் காலனி உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோயில், குமாரசாமிபேட்டை சிவகாமசுந்தரி உடனடியாக ஆனந்த நடராஜர் திருக்கோயில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவானேஸ்வரர் கோயில் உட்பட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மேலும் எஸ்.வி. ரோடு பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சித்த லிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்பு சுவாமிக்கு 16 வகையான திரவங்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று, மகா தீபாரதனை காண்பிக்கப் பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.