40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பவர்களுக்கும், சூரிய ஒளியில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளதாவர்களுக்கும் தோலில் புற்றுநோய் செல்கள் வளரக்கூடும். தோல் புற்றுநோய் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நிலக்கரி, தார் மற்றும் பிற ஹைட்ரோகார்பன்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் பாதிக்கப்படலாம்.