அஜர்பைஜானில் நடைபெற்ற ஃபார்முலா 2 கார் பந்தயத்தில் நடந்த கோர விபத்தில் இந்திய வீரர் குஷ் மைனியின் கார் சுக்கு நூறான வீடியோ வைரலாகி வருகிறது. இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தபோது குஷ் மைனியின் கார் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதே இடத்தில் நின்றதாக கூறப்படுகிறது. அப்போது பின்னால் வந்த மற்ற கார்கள் மோதியதால் கார் சுக்கு நூறானது. இக்கோர விபத்தில் குஷ் மைனி, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.