அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபுளோரிடாவில் உள்ள தனது கோல்ஃப் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்த ட்ரம்ப் மீது ஏ.கே.47 ரக துப்பாக்கியால் பலமுறை சுட முயற்சி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபர் கருப்பு நிற காரில் ஏறி தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் 2வது முறையாக தாக்குதல் நடந்துள்ளது.