பாம்பு விஷம் உடலில் கலந்தவுடன் மரணம் ஏற்படுவது ஏன்?
பாம்பின் பற்களில் நஞ்சு சுரக்கிறது. பாம்பு ஒருவரை கடிக்கும் பொழுது இந்த நஞ்சு வெளியேறி, இரையின் உடலுக்குள் சென்று இரையின் நரம்பு மண்டலத்தை உடனடியாக தாக்குகிறது. பின்னர் ரத்த குழாய்களையும், இரத்த அணுக்களையும் தாக்கி ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தம் உறையும் பொழுது மூளை, இதயம் ஆகியவற்றிற்கு ரத்த ஓட்டம் நின்று போவதால் உடனடியாக மரணம் ஏற்படுகிறது. பாம்பு கடித்தவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டால் உயிரை காப்பாற்றி விடலாம்.