பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான செல்போன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் முக்கிய ரீசார்ஜ் திட்டமாக ரூ. 247 திட்டம் உள்ளது. இதில் வரம்பற்ற குரல் அழைப்புகளை பெறலாம். 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் ரூ. 247 திட்டத்தில் 50 ஜிபி டேட்டா கிடைக்க பெறுகிறது. கூடுதலாக, ஒருநாளைக்கு 100 எஸ்.எம்.எஸ், இலவச காலர் டியூன் வசதியை பெறலாம்.