இராஜபாளையம்: மலை பகுதியில் கனமழை. ஆற்றில் வெள்ள பெருக்கு...

64பார்த்தது
ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கன மழை காரணமாக ஆற்றில் வெள்ளப் பெருக்கு. சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க வனத்துறையினர் தடை.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததன் காரணமாக வறட்சி நிலவியது. இதனால் மலையடிவார ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. கடந்த சில தினங்களாக நகரில் மிதமான மழை பெய்தாலும், வனப் பகுதியில் மழைப் பொழிவு முற்றிலுமாக இல்லை. மேலும் தென்காசி, விருதுநகர் தேனி, திண்டுக்கல் என 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, மாலை நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள முள்ளிக்கடவு ஆறு, மாவரசியம்மன் கோவில் மற்றும் மலட்டாறு உள்ளிட்ட பீட்டுகளில் கன மழை பெய்தது. இதனால் அருவியில் தற்போது குற்றால அருவி போல தண்ணீர் கொட்டுகிறது. இதனை தொடர்ந்து அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் நேற்று மாலை முதல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்கவும், பக்தர்கள் ஆற்றை கடந்து மறு கரையில் உள்ள அய்யனார் கோயிலுக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வெள்ளப் பெருக்கை தொடர்ந்து ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள தடுப்பணை மூலம் நகராட்சிக்கு சொந்தமான 2 குடிநீர் தேக்கங்களுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி