நடிகரும், இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியுமான பாலா 3வது திருமணம் செய்துள்ளார். தனது உறவினரான சென்னையை சேர்ந்த கோகிலா என்பவரை இன்று திருமணம் செய்தார். எர்ணாகுளத்தில் உள்ள கலூர் கோயிலில் இன்று (அக்., 23) காலை நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. பாலா தனது முதல் மனைவி பாடகி அம்ருதாவை விவாகரத்து செய்த நிலையில், 2வது மனைவி எலிசபெத் உடனான திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்யவில்லை.