இராஜபாளையம் அருகே உள்ள முத்துசாமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக தளவாய்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேலும் தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். அப்போது சோதனையில் முகவூர் முத்துசாமிபுரத்தை சேர்ந்த குற்றாலமாடசாமி என்பவர் தமிழக அரசால் தடை செய்த நம்பர் லாட்டரிகள் மற்றும் பிற மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ய வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது தளவாய்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்