பெங்களூருவில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பாபுசாபால்யா என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் கனமழையால் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்குள் 8 பெர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், 14 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. தொடர் கனமழையால் பெங்களூருவில் 1,079 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.