விருதுநகர்: டூவீலரில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி
மதுரை மாவட்டம் ஆனையூர் பகுதியைச் சார்ந்தவர் சேகர் (65). இவர் இருக்கன்குடியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்த சேகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சேகர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து சேகரின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் இருக்கன்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.