திருச்சுழி: ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை

76பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் இன்று அக்.7 நண்பகல் முதல் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பள்ளிமடம், தமிழ்பாடி, கார்த்தியப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. மேலும் திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.

மேலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி