விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 20 ஆண்டுகளுக்கு பின் விஜயதசமியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த அணி வகுப்பு ஊர்வலம் புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் முன்பு இருந்து துவங்கியது. முன்னதாக சங்க கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டு ஊர்வலம் துவங்கியது.
இந்த ஊர்வலத்தை ஜில்லா சங்க சாலக் விஜயராகவன் துவக்கி வைத்தார். புளியம்பட்டியில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலம் பாம்பே மெடிக்கல் சந்திப்பு, சிவன் கோவில் சந்திப்பு, முருகன் கோவில் சந்திப்பு, அகமுடையார் மஹால், திருச்சுழி ரோடு வழியாக நேரு மைதானம் வரை சென்று நிறைவுற்றது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தின் ஒரு நகரின் முக்கிய சந்திப்புகளில் பெண்கள் மலர் தூவி ஊர்வலத்திற்கு வரவேற்பு அளித்தனர். ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை முன்னிட்டு ஏ. எஸ். பி மதிவாணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆத்திபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விபாக் பிராசாரக் முகேஷ் சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில்
விபாக் சங்க சாலக் சிவலிங்கம் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வெள்ளை சட்டை காவி பேண்ட் என ஆர். எஸ். எஸ் சீருடை அணிந்து 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை கே. கே. ராஜா ஒருங்கிணைப்பு செய்தார்.