திருமேனிநாதர் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னோருக்குத் திதி,

74பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி யில் உள்ள
அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் மகாளய அமாவாசையை
முன்னிட்டு காலை முதலே ஏராளமான பக்தர்கள் குண்டாற்றில் முன்னோர்களுக்கு
தர்ப்பணம், திதி கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசையை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில்
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்து வழிபடுவதுவழக்கம்.
முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய திருச்சுழியில் திருமேனிநாதராய்
எழுந்தருளியுள்ள சிவபெருமான் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருச்சுழி ஸ்தலமானது காசி, ராமேஸ்வரம் புண்ணிய ஸ்தலங்களுக்கு
அடுத்தபடியாக ஒரு புண்ணிய ஸ்தலமாக உள்ளது. மகாளய அமாவாசையான இன்று ஆயிரக்கணக்கான
பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம், திதி கொடுத்து
வருகின்றனர். மகாளய அமாவாசை காலங்களில் குண்டாற்றில்
பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குண்டாற்றில் முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுத்த பின்னர், ஸ்ரீ திருமேனிநாதர் கோவிலில் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான விளக்கேற்றி வைத்து சாமி தரிசனம் செய்தனர். திருச்சுழி நண்பர்கள் தன்னார்வக் குழுவினர் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி