விருதுநகர்: நீரை மலர் தூவி வரவேற்ற அமைச்சர்

68பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணறு விவசாய மக்கள் பயன்பெற வேண்டி சென்னம்பட்டி அணைக்கட்டு திட்டம் தொடங்கப்பட்டது. கனவுத் திட்டம் குறித்து சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு குரல் கொடுத்தார்.

இந்நிலையில் அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுத் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறை மானிய கோரிக்கையிலிருந்து இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியானது.

தற்போது கட்டுமான சுமார் 15 கோடி செலவிட்டில் தொடங்கப்பட்ட பணிகள் நிறைவடைந்து கடந்த மாதம் நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு "சென்னம்பட்டி அணைக்கட்டு - வலது கால்வாயை திறந்து வைத்தார்.

இத்திட்டத்தினால் காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதிகளில் உள்ள 19 கண்மாய்களுக்கு நீர் கிடைக்கும். இதன் மூலம் 746. 62 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று விவசாய மக்களின் வாழ்வாதாரம் முன்னேற வழி வகுப்பதற்காக தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் கரிசல் பூமியை மீண்டும் உயிர்பெறச் செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்ட சென்னம்பட்டி வலது கால்வாயில் சென்னம்பட்டியில் இருந்து மல்லாங்கனூர் வரை செல்லும் இந்த கால்வாயில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நீர்வரத்து வருவதை இன்று தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மலர் தூவி வரவேற்று நீர்வரத்தினை ஆய்வு செய்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி