கொலை வழக்கில் சாட்சியை மிரட்டிய செல்வகுமார் என்பவர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா பிள்ளையார் குளம் பகுதியைச் சார்ந்தவர் கணேஷ் பிரகாஷ் வயது 27 இவர் அதே பகுதியைச் சார்ந்த செல்வகுமார் என்பவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள கொலை வழக்குக்கு சாட்சியாக இருப்பதாக கூறப்படுகிறது. செல்வகுமார் மீது நடைபெற்று வரும் கொலை வழக்கிற்கு கணேஷ் பிரகாஷ் சாட்சி சொல்லக்கூடாது என கூறி செல்வகுமார் கணேஷ் பிரகாஷ் மிரட்டி வந்ததாகவும் நிலையில், செல்வ பிரகாஷ் தாக்கி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் செல்வக்குமார் மீது முக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்