மேலக்குருணைகுளம் பகுதியில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த எட்டு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் மாலதி வயது 23. இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த பாண்டியராஜன் என்பவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தங்கப்பாண்டி முனியாண்டி தெய்வானை பாண்டி செல்வி முருகன் நாகலட்சுமி சந்தோஷ் ஆகியோர் மாலதியை தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாலதி அளித்த புகாரி அடிப்படையில் திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்