விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, A. நெடுங்குளம் பகுதியில் காரியாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் அசோக்குமார், சமீளா பேகம், ஆகியோர் நேரடியாக சென்று 100 நாள் வேலை செய்யும் பெண் பணியாளர்களிடம் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். காவல்துறையினரை உதவிக்கு அழைக்கும் விதமாக அவசர அழைப்பு, புகார் அளித்தல், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, காவல் நிலையங்கள், அதிகாரிகளின் தொடர்பு எண்கள் உட்பட காவல்துறை தொடர்பான சுமார் 60 விதமான தகவல்களை பெரும் வகையில் உருவாக்கப்பட்ட காவல் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் 100 நாள் பணியாளர்களின் ஆன்ட்ராய்டு செல்போனில் காவலன் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காவலன் செயலியில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் எண்களை பதிவு செய்வது, எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் செய்முறை விளக்கம் அளித்தனர்.