விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கே. ஆலங்குளம் பகுதியில் அமைய உள்ள எத்தனால் ஆலையைக் கண்டித்தும், அதற்கு அனுமதி அளித்த அரசைக் கண்டித்தும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தோப்பூர் முருகன் தலைமையில், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மணிமேகலை உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு சென்று எத்தனால் ஆலையைக் கண்டித்து நடைபெறும் ஆர்பட்டத்திற்கு முழு ஆதரவு அளித்தனர். கே. ஆலங்குளம் பகுதியில் விவசாயத்தை முற்றிலும் பாதிக்கக் கூடிய எரிசாராய ஆலையான எத்தனால் ஆலை அமைக்க அனுமதி அளித்த விளம்பர ஸ்டாலின் திமுக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் பொதுமக்கள் இன்று காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தோப்பூர் முருகன் மற்றும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமேகலை உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு இந்த எத்தனால் ஆலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு முழு ஆதரவு அளித்தனர். மேலும் ஒன்றிய செயலாளர் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டனர்.