விருதுநகரில் அதிமுக தொண்டரை நேரில் சந்தித்து விசாரித்த முன்னாள் அமைச்சர்
விருதுநகரில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அதிமுக தொண்டரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நிதி உதவி வழங்கினார். விருதுநகரில் நகரம் 10 வது வார்டு பகுதியை சேர்ந்தவர் முன்னாள் நகர சிறுபான்மை பிரிவு நிர்வாகி அப்த்துல் ரகுமான்.இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிப்படைந்துள்ளார். அப்துல் ரகுமானை முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவரது இல்லத்திற்க்கு சென்று உடல்நலம் விசாரித்து கழக பொது செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் சார்பாக நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வரதராஜன் , ஒன்றிய கவுன்சிலர் சரோஜா மாதவன், நகரக் கழக துணைச் செயலாளர் பா. கண்ணன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.