தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

65பார்த்தது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில், இந்திய வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் சட்ட விதிகள்-2008 இன் படி, தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்கள் விதி எண் 84-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி, விண்ணப்பங்களை மாவட்டத்திலுள்ள, அனைத்து அரசு பொது இ-சேவை மையம் மூலம், இணைய வழி வாயிலாக(Online applications) (https: //www. tnesevai. tn. gov. in) என்ற முகவரியில் வரும் 19. 10. 2024-ஆம் தேதிக்குள், கீழ்காணும் ஆவணங்களுடன்; பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்ப படிவம்,. கட்டிட வரைபடங்கள், நிலத்தின் உரிமைக்கான ஆவணம், வாடகை ஒப்பந்தப் பத்திரம் - அசல்,. உரிமக் கட்டணம் அரசுக் கணக்கில் செலுத்திய செலுத்துச் சீட்டு, அடையாள அட்டை, ஊராட்சி / நகராட்சியில் வரி செலுத்திய ஆவணங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -2.

இந்திய வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் சட்ட விதிகள் 2008 இன் கீழ் உள்ள விதிமுறைகளின்படி, விண்ணப்பங்கள் பரீசீலனை செய்யப்பட்டு, தகுதியான மனுதாரர்களுக்கு 30 நாட்கள் மட்டும் செல்லத்தக்க தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி