சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாகவிழிப்புணர்வு பேரணி

58பார்த்தது
விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக மாநில அளவிலான மாநாடு மாநில பொதுச் செயலாளர் நூர் ஜஹான் தலைமையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இறுதி நாளான இன்று, தமிழக அரசுக்கு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1000க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும்அங்கன்வாடி பணியாளர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள்,

தமிழகம் முழுவதும் சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக தமிழக நிரப்பிட வேண்டும், பணியாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு, ஈட்டா விடுப்பு வழங்கிட வேண்டும், காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்தின் மூலம் அமல்படுத்த வேண்டும்,

பிழைப்பூதியம் வழங்கிட வேண்டும், ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவதில் உள்ள முரண்பாடுகளை கலைத்திட வேண்டும், ஆண் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமணம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்திய படி இந்த விழிப்புணர்வு கலந்து கொண்டனர்,

இந்த விழிப்புணர்வு பேரணியானது விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தொடங்கி மாரியம்மன் கோவில், மெயின் பஜார், தெப்பம் , வாடியான் தெரு வழியாக அருப்புக்கோட்டை சாலையில் உள்ள நகராட்சி பூங்கா அருகில் முடிவடைந்தது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி