விருதுநகர் மாவட்டம்,சிவகாசி அருகே புதுக் கோட்டையைச் சேர்ந்தவர் அருணாச்சல பாண்டியன் (40). லோடுமேனாக இருந்தார். இவரது முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் புதுக்கோட்டையில் தர்மர் என்பவருக்கு சொந் தமான தோட்டம் அருகே இயற்கை உபாதைக்காக சென்றார்.
தோட்டத்தை சுற்றி மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்ததை அருணாச்சலபாண்டியன் தொடவும் மின்சாரம் தாக்கி காயமடைந்தார். மேலும் காயமடைந்த நபரை சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து எம். புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.