சிவகாசி அருகே தகர செட்டில் சட்டவிரோதமாக சரவெடிகள் பதுக்கிய நபர் கைது. சரவெடிகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி பேருந்து நிலைய பின்புறம் முருகேந்திரன் என்பவர் செல்லமுத்து டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் கடை அருகே தகர செட் அமைத்து சட்டவிரோதமாக தகர செட் அமைத்து சரவெடிகள் பதுக்கி இருப்பதாக சிவகாசி நகர் காவல் நிலையத்தில்ரகசிய புகார் வந்தன. மேலும் புகாரின் சார்பு ஆய்வாளர் இலக்கிய முத்து தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். மேலும் சம்பவ இடத்திலிருந்த சுமார் பத்தாயிரம் மதிப்புள்ள 1000, 2000, வாலா சரவெடிகள் அடங்கிய 36 பெட்டிகளை பறிமுதல் செய்த போலீஸார் முருகேந்திரன் மீது சிவகாசி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.