ஆவியூரில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

80பார்த்தது
காரியாபட்டி அருகே ஆவியூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிட அலுவலகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே
ஆவியூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கிராம ஊராட்சி 15 வது நிதுக்குழு மானியம் கனிம வளநிதியின் கீழ் ஆவியூர் ஊராட்சி மற்றும் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி செயலக கட்டிட திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

சுமார் 42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயசீலன் தலைமையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆவியூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர் தமிழ்வாணன், ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி