*காரியாபட்டி அருகே வினோத கிராமத்து திருவிழா - பறவை காவடியில் அந்தரத்தில் தொங்கியபடி நேற்றிகடன் செலுத்திய பக்தர்*
*காரியாபட்டியில் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பறவைக்காவடி, பால்குடம் எடுத்தும், அலகுகுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். *
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஜெகஜீவன் ராம் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகாகாளியம்மன் கோயில், மற்றும் காமராஜர் காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் உற்சவ திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்த நிலையில் இன்று நெடுங்குளம் தெற்காற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்தும், முதுகில் அலகு குத்தி ஆட்டோவே இழுத்து வருதல், 6 முதல் 12 அடியுள்ள விதவிதமான அலகு குத்தி ஐயப்பன் கோயில், பஜார், காவல் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் காரியாபட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து கோயிலை வந்தடைந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்கள்.
இதில் பறவை காவடி எடுத்த பக்தர் ஆட்டோவில் அந்தரத்தில் தொங்கியவாறு அவர் மீது பல்வேறு பழங்கள், இளநீர் மற்றும் முகம் முழுவதும் அலகு குத்தியவாறு வினோத நேர்த்திக்கடன் செலுத்தினார்.
மேலும் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த பால்குடம் மகா காளியம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது.