ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

ஸ்ரீவில்லிபுத்தூர்: போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. கடந்த 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து விநாயகர் சிலைகள் கரைக்கும் வைபவம் நடைபெற்று வந்தது. நேற்று(செப்.9) இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தன. அனைத்து விநாயகர் சிலைகளும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை கிராமத்தில் அமைந்துள்ள கோனேரியில் கரைக்கப்பட்டது. வழக்கமாக ஸ்ரீவில்லிபுத்தூர் விநாயகர் ஊர்வலம் மசூதி வழியே செல்வதால் பொதுமக்கள் மத்தியில் பதட்டத்தை தணிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 700க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வீடியோஸ்


விருதுநகர்