ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

ஸ்ரீவில்லிபுத்துார்: வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்...

ஸ்ரீவில்லிபுத்துார்: வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வீ. ப. ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ.ஆ.ப., இன்று (18.11.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், பிளவக்கல் அணை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.5.4 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட வகுப்பறை கட்டடங்கள் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையும், இராமசாமியாபுரம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.45 இலட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக்கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும் மற்றும் 15-வது மானிய நிதிக் குழுவின் கீழ் ரூ.6.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகத்தினையும், பின்னர் 15-வது மானிய நிதிக் குழுவின் கீழ் ரூ.13.65 இலட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு பணிகள் தரம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வட்டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


விருதுநகர்