ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வத்திராயிருப்பு பஜார் பகுதியில் இயங்கி வரும் பெட்டிக்கடையில் வைத்து அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக வத்திராயிருப்பு காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேலும் தகவலின் பேரில் நிலைய சார்பு ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீஸார் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் தமிழ அரசால் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.