ஸ்ரீவில்லிபுத்துாரில் மாநில அளவிலான கபாடி போட்டி. இறுதி போட்டியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே. டி. இராஜேந்திரபாலாஜி. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் மம்சாபுரம் சிவந்திபட்டி இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் திருக்கோவில் புரட்டாசி திருவிழாவினை முன்னிட்டு
சிவந்திபட்டி நாடார் கபாடி கழகம் நடத்திய முதலாம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும்
மின்னொளி கபாடி போட்டியின் இறுதி போட்டிகள் நேற்று இரவு நடைப்பெற்றன. மேலும் இறுதி போட்டியினை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. இராஜேந்திரபாலாஜி கலந்து கொண்ட அவருக்கு கபாடி வீரர்களை அறிமுகம் செய்து வைத்து போட்டியினை துவக்கி வைத்தார். பின்னர் இறுதி போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடத்தை பிடித்த அணியிணருக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பணம் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது கபாடி கழக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.