ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கஞ்சா விற்பனை செய்த நபர் 2 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானம் முன்பாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர் சோதனையில் ஸ்ரீவில்லிபுத்துார் கொல்லுாரை சேர்ந்த துரைப்பாண்டி (22), சின்னயப்பர் (17) ஆகிய இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டத்து தெரிய வந்தன. மேலும் அவர்களிடமிருந்து 30 கிராம் கஞ்சா மற்றும் ரொக்க பணத்தை கைப்பற்றிய போலீஸார் இருவருர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.