ஸ்ரீவில்லிபுத்தூர்: 40 சவரன் தங்க நகையை மீட்ட போலீஸார்...

50பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் வீடுகளில் திருடிய கொள்ளையன் மூர்த்திடம் விசாரணை. 47 சவரன் தங்க நகை மீட்பு.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தில் சிறையில் இருந்த முகமூடி திருடன் மூர்த்தியை காவலில் எடுத்து விசாரித்த குற்றப்பிரிவு போலீஸார் 47 சவரன் தங்க நகைகள் மீட்பு. பிரபல முகமூடி கொள்ளையன், தேனி மாவட்டம், தென்கரையை சேர்ந்த அருண்குமார், சுரேஷ்குமார் ஆகிய இருவரை ஜூன் மாதம் ராஜபாளையம் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளியான மூர்த்தியின் தாய் சீனித்தாய், மனைவி அனிதாபிரியா மற்றும் உறவினர்கள் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 75 லட்சம் மதிப்புகள்150 சவரன் தங்க நகை, ரூ. 2. 50 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த கும்பலின் தலைவனான மூர்த்தியை கடந்த ஜூலை 9-ம் தேதி கோயம்புத்தூர் போலீஸார் கைது செய்தனர். இந்த கும்பல் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதத்தில் 7 வீடுகளில் திருட்டு சம்பவம் நடைப்பெற்றன. இதையடுத்து கோவை மத்திய சிறையில் இருந்த மூர்த்தியை ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீஸார், காவலில் எடுத்து, விசாரணை நடத்தியதில் அவரிடம் இருந்து 47 சவரன் தங்க நகையை மீட்டனர். பின்னர் மூர்த்தியை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கோவை சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி