ஸ்ரீவி: செப்பு தேரோட்டத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டம்...

68பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீ வடபெருங்கோவிலுடையான் பிரம்மோற்சவம் செப்பு தேரோட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த வடபத்திர சயனார் என்று அழைக்கப்படும்
ஸ்ரீ வடபெருங்கோவிலுடையான் புரட்டாசி பிரம்மோற்சவ செப்பு தேரோட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆனது 108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்றாகும்.
ஸ்ரீ மகாலட்சுமியின் அம்சமாகிய
ஸ்ரீ ஆண்டாள் மானிடப் பெண்ணாக பூமியில் அவதரித்து பூமாலை சூடி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தார். அவ்வாறு மானிடப் பெண்ணாக பிறந்த
ஸ்ரீ ஆண்டாளுக்கு பூ மாலை சூட்டி பின் பாமாலை பாடினாரோ அவருடைய திருக்கோவிலானது
ஸ்ரீ ஆண்டாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது.
ஸ்ரீ வடபத்ரசயனர் என்று அழைக்கப்படும்
ஸ்ரீ வடபெருங்கோவிலுடையான் புரட்டாசி பிரம்மோற்சவம் விழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான செப்பு தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. ஸ்ரீ பூதேவி, ஸ்ரீதேவி சுமேத,
ஸ்ரீ வடபெருங்கோவிலுடையான் இன்று காலை திருத்தேரில் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனார். தேர் நான்கு ரத வீதிகள் சுற்றி வந்து நிலையத்தை அடைந்தது. பெருமாள் தீர்த்தவாரி வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி