ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளிய 3 பேர் கைது. 3 வாகனங்கள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவூத்து அருகே உள்ள வண்ணான் ஓடையில் சட்ட விரோதமாக மணல் டிராக்டரில் அள்ளுவதாக வத்திராயிருப்பு காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் வத்திராயிருப்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் மகாராஜபுரத்தை சேர்ந்த அகமதுதாஜ்தீன் மற்றும் கோபாலன், T. கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் ஒரு JCB மற்றும் 2 டிராக்டரை கொண்டு சட்ட விரோதமாகவும், திருட்டுதனமாக அள்ளுவது தெரிய வந்தன. மேலும் மணல் அள்ள பயன்படுத்திய JCB மற்றும் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீஸார் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில், மேற்படி மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.