ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள வத்திராயிருப்பு சுற்று பகுதிகளில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய பலத்த மழை. விவசாயிகள் மகிழ்ச்சி.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் வட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்துக்கு உட்பட்ட கான்சாபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், கோபாலபுரம், அழகாபுரி போன்ற சுற்று பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தன. மேலும் மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து சாலையில் வெள்ளமன ஓடின. மாலை நேரத்தில் தொடர்ந்து இடைவிடாமல் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தன. மேலும் இந்த பருவமழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கிராம பகுதிகளில் இடி, மின்னல் மழை மற்றும் காற்றால் அவ்வபோது மின்தடை ஏற்பட்டன. மேலும் ஆங்காங்கே சிறிய மரங்கள் முறிவு ரன்பட்டு ரோடுகளில் ளழுந்து கிடந்தால் போக்குவரத்தும் பாதிப்பு அடைந்தன. விவசாயிகள் கூறுகையில் இதைப் போல் பருவ பெய்தால் இந்த வருடம் விவசாயம் பசுமையாக இருக்கும் என்று நம்பிகையுடன் தெரிவிக்கின்றனர்.