ஸ்ரீவி: 140 கிலோ குட்கா புகையிலை பறிமுதல். ஒருவர் கைது..

78பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெங்களூரில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட 15 மூடை குட்கா புகையிலை மற்றும் கார் பறிமுதல் ஒருவர் கைது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை விற்பனையை தடுக்கும் வகையில் எஸ். பி கண்ணன் உத்தரவின் படி போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் இருந்து கார் மூலம் குட்கா கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் டி. எஸ். பி ராஜா உத்தரவின் படி வன்னியம்பட்டி எஸ். ஐ சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸார்
இன்று அதிகாலை 5 மணி அளவில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, 15 மூடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை இருந்தது தெரியவந்தது. பின்னர் காரை ஓட்டி வந்த ராஜபாளையம் அருகே தேவதானத்தை பகுதியை சேர்ந்த ராஜேஷ் (39) என்பவரை கைது செய்த போலீஸார், ரூ. 85 ஆயிரம் மதிப்பிலான 146 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி