சிவகாசி - Sivakasi

சிவகாசி: பட்டாசு குடோனுக்கு வருவாய் துறையினர் சீல்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து விஸ்வநத்தம் பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் அன்புராஜ் மற்றும் கருணை சோமசுந்தரம் ஆகிய இருவரும் தனிதனியாக லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் உரிய அனுமதி இல்லாமல், சட்ட விரோதமாக. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகளை லாரி மூலம் அனுப்பும் லாரி செட் நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து வருவாய்த்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் மற்றும் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிய அனுமதி இல்லாமல் லாரி செட் செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300 பட்டாசு பண்டல்களோடு இரண்டு லாரி செட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி அரசின் அனுமதி இல்லாத கட்டிடங்களில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தால் பட்டாசுகளை பறிமுதல் செய்வதுடன், கட்டிடங்களுக்கும் சீல் வைப்பதோடு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் மற்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்துார் : லாட்டாரி சீட்டுகள் விற்பனை செய்த முதியவர் கைது
Oct 18, 2024, 16:10 IST/ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்துார் : லாட்டாரி சீட்டுகள் விற்பனை செய்த முதியவர் கைது

Oct 18, 2024, 16:10 IST
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள மடார்வளாகம் கோவில் அருகே இருக்கும் பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். சோதனையில் ஸ்ரீவில்லிபுத்துார் நம்பி நாயுடு தெருவை சேர்ந்த 75 வயதுடைய முதியவர் முத்து கருப்பன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் நம்பர் சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.